உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொஹரம் பண்டிகை; 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்

மொஹரம் பண்டிகை; 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள்

தஞ்சாவூர்; காசவளநாடுபுதுாரில், 300 ஆண்டுக்கும் மேலாக மொஹரம் பண்டிகையை ஹிந்துக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து கொண்டாடி வருகின்றனர். 


வழக்கம்போல் இந்த ஆண்டு மொகரம் பண்டிகையையொட்டி காசவளநாடு கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பு விரதத்தை தொடங்கினர். மேலும் ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள அல்லாசாமி என்றழைக்கப்படும், உள்ளங்கை உருவத்தை வைத்து, தனியாக பந்தல் அமைத்து விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயம் மற்றும் புது பாத்திரங்களில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். இன்று (17ம் தேதி) ஊர்வலமாக அல்லாசாமி என்ற அழைக்கப்படும் உள்ளங்கை போன்ற உருவத்தை சுமந்து, தீ மிதித்து வழிபட்டனர். இதில், அக்கம் பக்கத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !