மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
417 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
417 days ago
வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும்.அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாகக் கிடைக்கும். பிரான வாயு அதிகமாகக் கிடைக்கும் மாதமும் இதுதான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால்தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வந்தது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்தக் காலகட்டத்தில் பரவும் வேம்பும், எலுமிச்சையும் இய ற்கையாகவே சிறந்த கிருமி நாசினிகள். பலர்கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால். நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால்தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம். ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
417 days ago
417 days ago