செக்கடி காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :546 days ago
மேலுார்; செக்கடி காளியம்மன் ஆனி மாத திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது . நேற்று பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து ரதத்தில் அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலுாரை சேர்ந்த ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.