களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :630 days ago
களக்காடு; களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலில் ஆடி மாதப்பிறப்பான நேற்று மணி மண்டபத்தில் சங்கு பூஜை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.