ஆடி வெள்ளி; காளியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :457 days ago
கோவை; சாய்பாபா காலனி காளியம்மன் கோவில் தெரு எண் - 09 இருக்கும் காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.