அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் திருஉருவ சிலைக்கு பூஜை
ADDED :783 days ago
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம்மகா சங்கரா மினி ஹாலில், அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு மகா பெரியவரின் திருஉருவ சிலைக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு மகா பெரியவர் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரை தரிசனம் செய்தனர்.