திருநீலகண்டியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ADDED :783 days ago
கோவை; மதுக்கரை ஊத்துக்காடு, செட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் திருநீலகண்டியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டும் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கண்டியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.