அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :795 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.