ராமேஸ்வரம் கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ADDED :440 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுவாமி தரிசனம் செய்தார். இன்று மாலை 3:40 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வந்தார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜை, மகா தீபாரதனையில் நீதிபதி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின் நீதிபதிக்கு, கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். இதன்பின் கோயில் மூன்றாம் பிரகாரம் மற்றும் கட்டிடக் கலைகளை கண்டு ரசித்தார். பின் மாலை 5 மணிக்கு காரில் மதுரை புறப்பட்டு சென்றார்.