உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி மவுனகுருசாமி குருபூஜை விழா

திருமலைக்கேணி மவுனகுருசாமி குருபூஜை விழா

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ளது.காமாட்சி மவுனகுருசாமி மடம் இங்கு நேற்று சுவாமியின் வருடாந்திர குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி சுவாமியின் ஐம்பொன் சிலைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காமாட்சி மவுனகுருசாமி மடத்தின் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !