வடவள்ளியில் தாம்ப்ராஸ்ல் பகவத் சேவை; அம்பாளை வழிபட்டனர்
ADDED :443 days ago
வடவள்ளி; வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், பகவத் சேவை பூஜை நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் வடவள்ளி கிளை சார்பில், ஆடி மாதம், பவுர்ணமி தினத்தையொட்டி, பகவத் சேவை வடவள்ளி தாம்ப்ராஸ் ஹாலில் நேற்று நடந்தது. இதில், சக்கர வடிவில் வரையப்பட்ட கோலத்தின் மீது வைக்கப்பட்ட திருவிளக்கில் விளக்கேற்றி பூஜித்து, அந்த விளக்கில் ஒளி வடிவமாக பிரசன்னமாகிய அம்பாளை வழிபட்டனர். இந்த பூஜை, உலக நலன் வேண்டியும், தீய சக்திகள் அகன்று, வாழ்வு வளம் பெற வேண்டி செய்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், மாநில செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் ரமேஷ், வடவள்ளி கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் சித்ரா, இளைஞரணி செயலாளர் கண்ணன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.