16 அடி உயர கபால காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :442 days ago
காரியாபட்டி; காரியாபட்டியில் 16 அடி கபால காளியம்மன் கோயில் உள்ளது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகாசனம், கலச பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. நேற்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க பெண்கள் ஆயிரத்து 8 பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பஸ் ஸ்டாண்ட், முக்கு ரோடு, செவல்பட்டி வழியாக ஊர்வலமாகச் சென்று காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். சிவன், பெருமாள், அம்மன், கருப்பசாமி, மீனாட்சி, காளியம்மன் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.