உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னிவாடி; தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதலுடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு, மகா தீபாராதனை நடந்தது.


* ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவருக்கு கருங்காலி மாலை அலங்காரத்தில், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பணசாமிக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !