பிரம்மஸ்தான ஆலயத்தில் குரு பூர்ணிமா விழா
ADDED :443 days ago
பெ.நா.பாளையம்; கோவை கவுண்டம்பாளையம், நல்லம்பாளையம் ரோடு, மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மஸ்தான ஆலயத்தில் குரு பூர்ணிமா விழா நடந்தது. விழாவை ஒட்டி காலை, 9:30 மணிக்கு குரு பாதுகை பூஜையும், 10.00 மணிக்கு குரு ஹோமம் நடந்தது. விழாவில், பிரம்மச்சாரி நிகிலேஷாமிர்த சைதன்யா பேசுகையில்,குரு என்பவர் மூன்று காலங்களையும் உணர்ந்தவர். அவர் இறைவனுக்கு ஒப்பானவர். மாதா அமிர்தானந்தமயி அத்தகைய சக்தி பெற்றவர். நமக்கு மாதா அமிர்தானந்தா மயி வடிவில், குரு கிடைத்திருக்கிறார், என்றார். விழாவையொட்டி, பஜனை, தியானம், அன்னதானம், ஹோமம் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, பிரம்மச்சாரிணி சர்வமிர்தா சைதன்யா செய்து இருந்தார்.