மக்காமலை சன்னாசிராயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :492 days ago
போடி; போடி அருகே அணைக்கரைப்பட்டி மரக்காமலை அடிவாரத்தில் சன்னாசிராயர், முனீஸ்வரன், கருப்பசாமி கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சன்னாசிராயர், முனீஸ்வரன், கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சன்னாசிராயரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.