சுப்ரமணியபுரம் சத்யசாய் சேவா சமிதியில் குரு பூர்ணிமா விழா
காரைக்குடி; காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் உள்ள சத்யசாய் சேவா சமிதியில், குரு பூர்ணிமா விழா நடந்தது.
காரைக்குடியில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் குரு பூர்ணிமா விழா கடந்த ஜூலை 19 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. ஜூலை 20 சிறப்பு பஜனை நடந்தது. நேற்று காலை சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பஜனையும் மகா மங்கள ஆரத்தியும், நாராயண சேவாவும் நடந்தது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு 200க்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டனர். சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன், சேர்மன் முத்துத்துரை, மாங்குடி எம்.எல்.ஏ., ஆகியோர் சாதுக்களுக்கு வஸ்திர மற்றும் சொர்ண சேவா வழங்கினர்.