மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.61 லட்சம்
ADDED :479 days ago
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 61 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி நாகராஜ், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உண்டியலில் 61 லட்சத்து 66 ஆயிரத்து 342 ரூபாய் ரொக்கம், 135 கிராம் தங்கம், 680 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள், மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.