உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்சிறுவளுர் பாப்பாத்தி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

மேல்சிறுவளுர் பாப்பாத்தி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல் சிறுவளுர் பாப்பாத்தி அம்மனுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவளுரில் உள்ள பாப்பாத்தி அம்மனுக்கு ஆண்டுதோறும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.அதுபோல் இவ்வாண்டு நேற்று காலை 11 மணிக்கு மேல்சிறுவளுர் தானிப்பாடி சாலையில் ஊர்வலமாக பால்குடம் பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.ஒரு மணி அளவில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு பச்சரிசி மாவிளக்கு இட்டு அம்மனுக்கு பூஜை செய்தனர்.நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.கோவில் நிர்வாகம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !