சின்னசேலத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :462 days ago
சின்னசேலம்; சின்னசேலத்தில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷக மற்றும் தீபாராதனையை கணேசர் குருக்கள் செய்து வைத்தார். தொடர்ந்து, சுவாமி உட்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.