விபூதி காப்பு அலங்காரத்தில் சிங்காநல்லூர் பாலசுப்பிரமணியர் அருள்பாலிப்பு
ADDED :769 days ago
கோவை; கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் - ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்துடன் விபூதி காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.