உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழுதுார் அருளொளி விநாயகர் கோயில் பாலாலயம்

வழுதுார் அருளொளி விநாயகர் கோயில் பாலாலயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயில் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கோயிலுக்கு பாலாலயம் பூஜை நடந்தது.

பரமக்குடி அரியனேந்தல் முதல் வழுதுார் வரை 47 கி.மீ., நான்கு வழிச்சாலையாக விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அருளொளி விநாயகர் கோயில் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சற்று தொலைவில் புதிதாக விநாயகர் கோயில் அமைப்பதற்கான பாலாலயம் பூஜை நடந்தது.

வேத மந்திரம் முழங்க விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம், அலங்காரத்தில் பாலாலய பூஜைகள் நடந்தது. அருளொளி மன்ற நிர்வாகிகள், தாய் வீடு ஆத்ம சாந்தி நிலைய பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !