காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சல் தரிசனம்
ADDED :548 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சலாட்டு உற்சவம் நடந்தது. இக்கோயில் ஆடித் திருவிழா ஜூலை 25ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஜூலை 29 ம் தேதி இரவு அம்பாள் ஊஞ்சல் தரிசனம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். பெண்கள் ஆரத்தி குட வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆக. 1ஆம் தேதி பால்குடம், பூத்தட்டு, ஆக. 2 ல் திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல் நடைபெறுகிறது. ஆக. 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.