ஆடி கார்த்திகை : போடி சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :599 days ago
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.