உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி வளர்பிறை பிரதோஷம்: பக்தர்கள் பரவசம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி வளர்பிறை பிரதோஷம்: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பெரிய நந்திய பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் மற்றும் பல வித வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதேபோல், சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !