திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தங்க தேரில் ஜெயந்திநாதர் உலா
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக வசந்த திருவிழாவையொட்டி சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளினார்.
முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் 30ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, 31ம் தேதி வரை 4 நாட்கள் ரூ.100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.