/
கோயில்கள் செய்திகள் / சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா; ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம்
சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா; ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம்
ADDED :2 days ago
ராமேஸ்வரம்; காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் சந்திரசேகரேந்திரர் சரஸ்வதி சுவாமியின் 133வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம் நடந்தது.
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி 133வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்திரசேகர் சரஸ்வதி சுவாமி சிலை வைத்து, கோயில் நான்கு ரதவீதியில் பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். அப்போது ரத வீதியில் கூடி இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் அனுஷம் கமிட்டியினர் செய்திருந்தனர்.