வைகாசி விசாகம்: ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :127 days ago
ஊட்டி: வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடந்தது.
வைகாசி விசாகத்தை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களான ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சூர் அருகே உள்ள அன்னமலை முருகன் கோவிலில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில், சிறப்பு அபிஷேகங்கள், தங்க கவச அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்றன. நிகழ்ச்சியை ஒட்டி, பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆடல், பாடலுடன் நடந்த பஜனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.