உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.

பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தியம் பகவானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தது.

பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:30 மணிக்கு நந்தியம், மூலவருக்கும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல், சாலை அகரத்தில் உள்ள அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும், திரு.வி.க., வீதி கைலாசநாதர் கோவில் உட்பட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !