ஆண்டாள் தேருக்கு நாள் செய்தல்
ADDED :132 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆக.14ல் ஆடிப்பூர தேரோட்டம் நடப்பதையொடயடி தேரை தயார் செய்வதற்கான பணிகளை துவக்குவதற்கான நாள் செய்யும் வைபவம் நேற்று நடந்தது.
நேற்று காலை 8:00 தேரின் முன்பக்க மேற்கு பகுதி சக்கரத்தின் முன்பு ரகுபட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் இரு கம்பங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, தீபாராதனை காட்டி தேரில் ஏற்றப்பட்டு, தேரினை தயார் செய்யும் பணி துவங்கியது. விழாவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.