உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசபாளையம் பாலகுருநாதீஸ்வர சுவாமிக்கு ருத்ராபிஷேகம்

ராசபாளையம் பாலகுருநாதீஸ்வர சுவாமிக்கு ருத்ராபிஷேகம்

ஆர்.கே.பேட்டை; பவுர்ணமியை ஒட்டி ராசபாளையம் பாலகுருநாதீஸ்வர சுவாமிக்கு நேற்று ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையத்தில் அமைந்துள்ளது பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில். பஞ்சமூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவிலில் பவுர்ணமியை ஒட்டி நேற்று ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்க வந்த திரளான பக்தர்கள், புனித நீர் கலசத்தை மங்கள வாத்தியங்கள் முழுங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பகல் 12:30 மணிக்கு, மூலவர் பாலகுருநாதீஸ்வர சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ராசபாளையம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இது போல, பவுர்ணமியை ஒட்டி பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில் உத்சவர் முருகப்பெருமானுக்கு நேற்று ஊஞ்சல் சேவை நடந்தது. அதை தொடர்ந்து, திரளான பக்தர்கள், கிரிவலம் வந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !