உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம்

கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம்

நத்தம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழாவில் அம்மன் பூ பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கைலாசநாதர் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 21 கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் கைலாசநாதர் -சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் மே 28, திருத்தேரோட்டம் மே 29 நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பூபல்லாக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லாக்கில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !