உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  மதூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி விழா விமரிசை

 மதூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி விழா விமரிசை

 மதுார்; மதுாரில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி விழா இன்று விமரிசையாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தில், ஏரிக்கரை அருகே ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இக்கிராம மக்களுடன் நெருங்கி பழகி வந்த குரங்கு ஒன்று ஏரிக்கரையில் கிராம தேவதை கோவில் அருகே இறந்தது. அந்த குரங்கு நினைவாக மதுார் ஏரிக்கரை மீது ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டி அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆஞ்சநேயருக்கு மூலம் நட்சத்திர நாளன்று பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுார் பஜனை கோஷ்டியினர் ஆஞ்சநேயரின் புகழ் பாடினர். அப்போது மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !