உடுமலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :128 days ago
உடுமலை: உடுமலையில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சின்னபொம்மன்சாளையில், விநாயகப்பெருமானுக்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது. பதினாறு திரவியங்களுடன் அபிஷேக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.