சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலில் திருக்கல்யாணம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா, மே 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூரண, புஷ்கலா தேவி, சேவுகப்பெருமான் ஐயனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கிராமத்தார்கள் முன்னிலையில் இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் தங்களது மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர். அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு ஸர்ப்ப வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். 6 ஆம் திருவிழாவான இன்று கழுவன் திருவிழா நடக்கிறது. ஜூன் 1ஆம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.