உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்திநாத்தில் சிருங்கேரி சுவாமிகள்; துளசி அர்ச்சனை செய்து பூஜை

முக்திநாத்தில் சிருங்கேரி சுவாமிகள்; துளசி அர்ச்சனை செய்து பூஜை

நேபாள நாட்டுக்கு சென்ற சிருங்கேரி சுவாமிகள், போக்ரா அருகே உள்ள முக்திநாத்தில் தரிசனம் மேற்கொண்டார்.

நேபாளம் நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு விது சேகர பாரதீ சன்னிதானம், ஏகாதசி தினத்தன்று போக்ரா வழியாக முக்திநாத் சென்றடைந்தார். கோவில் பிராகரத்தை வலம் வந்த அவர், 108 தாராவாக பொழியும், தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தார். தொடர்ந்து, அமர்ந்த நிலையில் எழுந்தருளியிருக்கும், மஹாவிஷ்ணுவின் கோவிலில் துளசி அர்ச்சனை செய்து, தீபாராதனை செய்து சிறப்பு பூஜை செய்தார்.

அதேபோல், போக்ராவில் குகைக்குள் உள்ள ஸ்ரீகுப்தேஸ்வரர், ஸ்ரீகேதாரேஸ்வரர் மற்றும் ஸ்ரீவிந்த்ய வாசினி ஆகிய  கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய பின், உலக நலன் கருதி, அன்றாடம் நடக்கும் ஸ்ரீ சந்தர மவுலீஸ்வரர் பூஜையினை செய்து அருளினார்.   – நமது நிருபர் – 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !