உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் திருத்தேர் உற்சவம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் திருத்தேர் உற்சவம்

மயிலாடுதுறை ; மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் சிகர விழாவான திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ஆம் திருநாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, மாயூரநாதர் சுவாமி, அபயாம்பிகை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்குப் பின் மகா தீபாராதனை செய்யப்பட்டு, சிதறுதேங்காய் உடைத்து தேர் புறப்பாடு செய்யப்பட்டது. வழியெங்கும் வீடுகளின் முன்பு பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். தேர் சிவகைலாய வாத்தியங்கள் முழங்க மாயூரநாதர் கோயிலின் நான்கு தேர் வீதிகளைச் சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவின் 10-ஆம் நாள் உற்சவமான வைகாசி விசாக பௌர்ணமி தீர்த்தவாரி நாளை கோயில் பிரம்ம தீர்த்தத்தில் மதியம் 1.15 மணியளவில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !