உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் காளியம்மன் கோயில் ஆடித்திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருப்புத்தூர் காளியம்மன் கோயில் ஆடித்திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.திருப்புத்தூர் நகரின் மேற்கு காவல் தெய்வமாக ராஜகாளியம்மன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆடி கடைசி வெள்ளியன்று ஆடித் திருவிழா நடைபெறும். அதை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து கோயிலில்  முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஆக.16 ல் காலை 7:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். கோயி்ல் முன்பாக பூக்குழி இறங்குவர். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலையில் பக்தர்களால்  பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.  ஏற்பாட்டினை செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !