வத்தலக்குண்டில் பழமையான ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்
ADDED :402 days ago
வத்தலக்குண்டு; வத்தலக்குண்டில் பழமையான ஆலமரத்திற்கு பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. கோயில், ஆலமரத்திற்கு நடந்த கும்பாபிஷேகம் தொடர்ந்து யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் புனித நீர் ஆலமரத்திற்கும் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.