துர்கையம்மன் கோவிலில் செடல் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :489 days ago
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு துர்கையம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.
விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு அலங்கார வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 27ம் தேதி தெருவடைச்சான், 28ம் தேதி முத்துஓடம், 29ம் தேதி யாளி வாகனம்,30ம் தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2.00 மணிக்கு காத்தவராயன் கழுகுமரம் ஏறுதல் நிகழ்ச்சி, செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.