உலகநன்மை படிப்பு சிறக்க வேண்டி மாணவியர் விளக்கு பூஜை
ADDED :439 days ago
திருப்பரங்குன்றம்; உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க வேண்டி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அனுஷாதேவி அறக்கட்டளைச் சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வகித்து துவக்கி வைத்தார். அருக்கட்டளை உபயதாரர் மஹாலட்சுமி தர்மராஜ், கல்லூரி தலைவர் இராஜகோபால், உபதலைவர் ஜெயராம், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திர பாபு, முதல்வர் ராமசுப்பையா சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு, பேராசிரியர்கள் பங்கேற்றனர். 1008 மாணவியர் விளக்கு பூஜை செய்தனர். பேராசிரியர்கள் விஷ்ணு சுபா, பரிமளா ஏற்பாடுகள் செய்தனர்.