திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா
ADDED :447 days ago
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதையொட்டி சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.