காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன்
ADDED :508 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில், பிரளய கால அம்மன், வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.