உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்மையம்மன் கோவிலில் வேப்பிலை அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கங்மையம்மன் கோவிலில் வேப்பிலை அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரப்பாக்கம்; ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், கங்மையம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, தினமும் அபிஷேகம் நடக்கிறது. நேற்று இரவு, அம்மனுக்கு பட்டு புடவை அணிந்து, பல வண்ண மலர்களால் மலர் அலங்காரம், குங்கும அலங்காரம் செய்து, 15,000 வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அம்மை நோயால் பாதித்து குணமடைந்த பக்தர்கள், வேப்பிலையால் உடையணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில் 1,000 பெண்கள் கூடி பொங்கலிட்டனர். காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவை, கோவில் அறங்காவலர் லியோ என் சுந்தரம் முன்னின்று நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !