சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் மாலை மாற்றல்
ADDED :534 days ago
பரமக்குடி; பரமக்குடியில் பெருமாள் கோயில்களில் நடந்த ஆடிப்பூர விழாவில் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் மாலை ஆண்டாள் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அப்போது ஏகாந்த சேவையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள், பெருமாள் சிறப்பு அபிஷேகம் நடந்து மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு பின் தேரில் வீதி உலா வந்தார்.