சிறுகுடி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED :425 days ago
நத்தம், நத்தம் அருகே சிறுகுடி செல்வ விநாயகர், துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து வளையல் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அவர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிறுகுடி கிழக்குத் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.