திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குரு பூஜை
ADDED :788 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது.
இன்று காலை சண்முகர் சன்னதியில் உள்ள மூலவர்கள் விநாயகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரரர், மாணிக்கவாசகர் முன்பு உற்ஸவர் சுந்தரர் எழுந்தருளினார். வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை முடிந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோயில் ஒதுவார்களால் ஏழாம் திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. உற்சவர் சுந்தரர் பல்லக்கில் கொடி கம்பம், நந்தியை மூன்றுமுறை வலம் சென்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி சென்றடைந்தார்.