சோளிங்கரில் கோவிலில் மஹாராஷ்டிர கவர்னர் தரிசனம்
ADDED :476 days ago
சோளிங்கர்; மஹாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு நேற்று வந்திருந்தார். அவரை, ராணிபேட்டை கலெக்டர் சந்திரகலா வரவேற்றார். மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த ராதாகிருஷ்ணனக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது. உடன், ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்டோர் இருந்தனர். சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மஹாராஷ்டிர மாநில கவர்னராக பதவி ஏற்றதில் இருந்து, சோளிங்கர் யோகநரசிம்ம சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதல் என் மனதில் இருந்தது. அது நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.