ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :489 days ago
ஆனைமலை; ஆனைமலையில் ஹிந்து முன்னணி சார்பில், கோவிலில் உழவாரப்பணி நடந்தது. கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை மையம் ஹிந்து முன்னணி சார்பில், சோமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் முன்னிலையில், கோவில் வளாகத்தில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வளாகம் முழுவதும் குப்பை மற்றும் புதர்களை அகற்றி துாய்மை செய்யும் பணியில், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.