உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடிய திருநள்ளாறு கோவில் யானை

சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடிய திருநள்ளாறு கோவில் யானை

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவில் யானை சுதந்திர தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை கையில் ஏந்தி சிறப்பாக கொண்டாடியது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.கோவில் யானை தினம் சரஸ்வதி குளத்தில் ஆனந்த குளியல் முடிந்து குளங்கரையில் உள்ள விநாயகரை வணங்குவது வழக்கம் இந்நிலையில் இன்று 78வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் கோவில் யானை சுதந்திரதின தேசிய கொடியை கையில் ஏந்திக்கொண்ட மரியாதை செலுத்து புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் வைராக பரவி வருகிறது.யானை தேசியகொடியை கையில் வைத்துள்ள படங்களை பல தனது செல்போனில் அனைவரும் கண்டுக்களிக்கு வகையில் புகைப்படம் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !