ஆலத்துார் தாகப்பாடி அம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் குவிந்தனர்
ADDED :386 days ago
கள்ளக்குறிச்சி; ஆலத்துார் தாகப்பாடி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழா, கடந்த 6ம் தேதி தட்டி அரைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, சந்திக்கல் வெளிகாப்பு கட்டுதல், அகண்ட தீபாரதனையும், தினமும் இரவு சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் தாகப்பாடி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்த பிறகு தேரோட்டம் தொடங்கியது. திரளான பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.